அறிமுக நடிகர் கணேஷ் சந்திரசேகரின் ‘செஞ்சி’ இசை வெளியீடு

வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் விருப்பத்துக்குரிய கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  ‘செஞ்சி’ என்கிற பெயரில் திரைப்படமாக அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர், கதையின் நாயகனாக நடித்து, தயாரித்துள்ளார்.  இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. .

 

ஏலியன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘செஞ்சி’.. இதில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கெசன்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஹரீஷ் ஷிண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை எல் வி முதது கணேஷ் இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநரும், கதையின் நாயகனும், தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் பேசுகையில்,“ நாடு, மொழி ஆகியவற்றுக்காக மட்டும்  போராட வேண்டும் என்பதில்லை. இந்தப் பூமிக்காகவும் போராட வேண்டும் என்கிற கருத்தை மையப்படுத்தி செஞ்சி உருவாகியிருக்கிறது.  சினிமா என்பதை பாமர மக்களும் உணர்ந்துக் கொள்ளும் வகையிலான இரண்டாவது கல்வி கற்பித்தல் என நான் கருதுகிறேன். சினிமாவில் ஒரு சிறு விடயத்தை நுட்பமாகவும், தெளிவாகவும்  வெளிப்படுத்தினாலும் கூட அது மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும். புதையல் என்ற மக்களின் நம்பிக்கையை முதன்மைப்படுத்தி இதன் திரைக்கதையை வெகுஜன மக்களுக்காக உருவாக்கியிருக்கிறோம்.” என்றார். .  .