இலங்கையின் சுழலில் சிக்கியது பாகிஸ்தான் : இலங்கை அணி அபார வெற்றி : தொடர் சமநிலையில்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Prabath Jayasuriya picked up a five-for, Sri Lanka vs Pakistan, 2nd Test, Galle, 5th day, July 28, 2022

2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

The Sri Lanka players celebrate Imam-ul-Haq's wicket, Sri Lanka vs Pakistan, 2nd Test, Galle, 5th day, July 28, 2022

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் நஷீம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அகாஷ் சல்மான் அதிகபட்சமாக 62 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

Imam-ul-Haq guides one to the leg side, Sri Lanka vs Pakistan, 2nd Test, Galle, 4th day, July 27, 2022

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 360 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் உப தலைவர் தனஞ்சய சில்வா 109 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணரத்ன 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

Imam-ul-Haq plays a shot on the leg side, Sri Lanka vs Pakistan, 2nd Test, Galle, 4th day, July 27, 2022

அதனடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 508 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 261 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் அதிகபட்சமாக 81 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்களையும் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 1 ரீதியில் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.