எதிர்வரும் 4 மாதங்களுக்கு அரச செலவினத்துக்காக குறை நிரப்பு பிரேரணை சபைக்கு சமர்ப்பிப்பு

எதிர்வரும் 4 மாதங்களுக்கு அரச செலவினத்துக்காக 327587 கோடியே 65 இலட்சத்து 58000 ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை அரசினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குமாக 48913 கோடியே 38 இலட்சத்து 91000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் எதிர்வரும் 4 மாதங்களுக்கான செலவுக்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் குறை நிரப்பு பிரேரணை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட விசேட செலவினங்களுக்காக 1344கோடியே 51 இலட்சத்து 1000 ரூபாவும் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்காக 46720 கோடியே 88 இலட்சத்து 33000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்காக 37632 கோடியே 56 இலட்சத்து 31000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 11280 கோடியே 82 இலட்சத்து 60000 ரூபாவும் சுகாதார அமைச்சுக்கு 24806 கோடியே 99 இலட்சத்து 98000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 30710 கோடியே 84 இலட்சம் ரூபாவும் கமத்தொழில் அமைச்சுக்காக 13856 கோடியே 485000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மின்சக்தி,வலுசக்தி அமைச்சுக்காக 26979 கோடியே 57 இலட்சத்து 50000 ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 20000 கோடி ரூபாவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் ,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்காக 7346 கோடியே 74 இலட்சம் ரூபாவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்காக 1592 கோடியே 20 இலட்சம் ரூபாவும் மிகுதி ஏனைய அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மொத்தமாக எதிர்வரும் 4மாதங்களுக்கு அரசாங்கத்தின் செலவுகளுக்காக மொத்தமாக 327587 கோடியே 65 இலட்சத்து 58000 ரூபாவை அனுமதித்துக்கொள்வதற்காக குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.