மஹர சிறைச்சாலையில் குழப்பநிலை- நால்வர் பலி – துப்பாக்கி பிரயோக சத்தம் கேட்பதாக பொது மக்கள் தகவல்

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுவன்முறைகள் காரணமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மஹர சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகளின் உடல்கள் ராகமவைத்தியசாலைக்கு வந்துள்ளன என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


25பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றிரவு 9.55 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


சிறைச்சாலையில் பாரிய தீ மூண்டுள்ளதை காணமுடிவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைவிலிருந்து பார்க்கும்போது பாரிய தீயை காணமுடிகின்றது துப்பாக்கி சத்தங ;களும் கேட்டன என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.