உக்ரைனின் அதிரடி தாக்குதல் – சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானம்

உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்யாவின் Ka-52 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 173 நாட்களை தொட்டு இருக்கும் நிலையில், இருநாட்டு இடையிலான தாக்குதல் நிதானமடைந்துள்ளது.

மேலும் இருநாட்டு அதிகாரிகளும் போர் நிறுத்தம் குறித்த கருத்துகளை தெரிவித்து வந்தாலும், அது தொடர்பான நடவடிக்கைகளில் இருநாடுகளும் அதிகாரப்பூர்வ செயல்முறைகளில் தங்களை ஈடுபடுத்தவில்லை.

இந்தநிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்யாவின் Ka-52 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் Ka-52 ரக ஹெலிகாப்டரின் இழப்பை முதலில் மறுத்த ரஷ்யா, ஹெலிகாப்டர் பாதுகாப்பாக விமான தளத்திற்கு வந்தடைந்ததாக தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யா தெரிவித்துள்ள கருத்தில் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக் கொண்டதுடன் விமானிகள் ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளது.