கனடாவில் சாணக்கியனுக்கு முஸ்லிம்கள் வழங்கிய பரிசு!வெடித்தது மற்றுமொரு சர்ச்சை

கனடாவில் வைத்து இன மத நல்லிணக்கத்தின் பெயரால்  சாணக்கியன் அவர்களுக்கு குர் ஆனை வழங்கியுள்ளனர்.

பதிலுக்கு பகவத் கீதையினையோ, பைபிளையோ சாணக்கியன் வழங்கியிருந்தால் மத இன நல்லிணக்கத்தின் பெயரால் அவர்கள் அதை பெற்றிருப்பார்களா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முஸ்லிம்கள் தடையாக இருக்கும் வரைக்கும் தமிழ் தரப்பின் நல்லிணக்க நடவடிக்கைகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போன்றதே.

கல்முனை வடக்கு விடயத்தில் தீவிரமாக இருந்த தமிழ் இளையோர்கள் நல்லிணக்கத்தின் பெயரால் காயடிக்கப்பட்டிருக்கின்றனர் அவர்களின் குரல்கள் மெளனிக்கவைக்கப்பட்டிருக்கின்றன.

இது கிழக்கில் தமிழர்களின் இருப்புக்கும் அரசியலுக்கும் ஆபத்தானது.

முஸ்லிம்களின் நல்லிணக்க நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களின் பக்கத்தை வலுப்படுத்தும் முகமாகவே காலம் காலமாக இருந்துவருகிறது.