சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை இவ்வருடத்தின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.