ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இணக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்புவழங்கியமை தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அதற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவருக்கான பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரப்பட்ட போதும் அவர் அதற்கு இணங்கவில்லை.

எனினும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் முதலாவதாக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பாக ரஞ்சனின் பொது மன்னிப்பு அமைந்தது.

எனினும் அரசியலில் ஈடுபடக்கூடாது உட்பட்ட நிபந்தனைகள் இந்த பொதுமன்னிப்பின் கீழ் விதிக்கப்பட்டுள்ளன.