ஆஸ்திரேலியாவில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி

ஆஸ்திரேலியாவில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான இன்று (30.08.2022) செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அரசினால் வலிந்து காணமலாக்கப்பட்ட எமது

உறவுகளைத் தேடி சர்வதேசத்திடம் நீதிகோரியும் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 2000 நாட்களாகத் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தும் ஆஸ்திரேலியாவின் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது.

ஆஸ்திரேலியாவின் NSW பாராளுமன்றம்  பகுதியில் ஒன்று கூடிய மக்கள்  தமிழீழத் தேசியக்கொடி, கறுப்புக்கொடி, பதாதைகள் மற்றும் சுலோகங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளையும்  உரிமைக் கோசங்களை எழுப்பியவாறு பயணித்ததைக் காணமுடிந்தது.

பல வெளிநாட்டவர்களும் எமது போராட்டத்தின் நோக்கத்தை அறிந்துகொண்டதுடன்  துண்டுப்பிரசுரங்களையும் பெற்றுச்சென்றனர்.

Dave Bell and Nadeena Dixon, செனட்டர் David Shoebridge,Veronica koman (Amnesty International Australia ), Renuga Inpakumar (Tamil Refugee Council) ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர.