இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு இந்தியாவும் சீனாவும் மிகவும் முக்கியம்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பொருளாதார கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டை கூட்டுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு இந்தியா சீனாவின் ஆதரவு மிகவும் முக்கியம் எனஇந்த விடயம் குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடன்களை குறைப்பதற்கும்  கடன்களை மீள செலுத்தவேண்டிய காலக்கெடுவை மறுசீரமைப்பு செய்வதற்கும் ஒருங்கிணைப்பு தளம் என அழைக்கப்படும் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு இலங்கை ஜப்பானின் உதவியை நாடியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஜப்பான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது என இந்த விடயம் குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் என்ற அடிப்படையில் சீனா இந்தியாவின் முக்கியமான பங்களிப்பை கருத்தில்கொண்டு இந்த சந்திப்புகளில் இந்த இரு நாடுகளும் கலந்துகொள்வது அவசியம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

வழமையான சூழ்நிலையில் இந்த சந்திப்பில் பாரிஸ் கிளப் நாடுகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்- கடன்பட்ட நாடுகள் அதனை திருப்பி செலுத்துவதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு பேண்தகுதீர்வை காண்பதற்கு உதவும் நோக்கில் 22 கடன்வழங்கும் நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே பாரிஸ் கிளப்.

ஜப்பான் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கின்ற அதேவேளை சீனாவும் இந்தியாவும் அதில் இடம்பெறவில்லை.

பிராந்தியத்தில் இந்தியா சீனாவின் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கை இந்த நாடுகளிற்கு திருப்பி செலுத்தவேண்டிய கடன் காரணமாகவும் உத்தேச சந்திப்பில் இந்தியா சீனா கலந்துகொள்வது மிகவும் முக்கியமானது என  இந்த விடயம் குறித்து நன்கறிந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா சீனா இல்லாமல் கடன் வழங்கிய நாடுகளின் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு தயங்கும் ஜப்பான் அனைத்து கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பு தளத்தின்  மூலமே  முன்னெடுக்கவேண்டும்இஇலங்கைக்கும் கடன் வழங்கிய நாட்டிற்கும் இடையில் இரு தரப்பு உடன்பாடு எதனையும் செய்யக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளது எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை இந்திய தரப்புகள் இராஜதந்திர தரப்புகள் ஊடாக கடன் வழங்கிய தரப்பின் சந்திப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனஇந்தியா கொழும்பிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இலங்கை இந்த வருடம் சுதந்திரத்திற்கு பின்னரான அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தவேளை இந்தியா உணவு மருந்து எரிபொருளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கான கடன் உதவி உட்பட 3.8 பில்லியன் டொலர் நிதிஉதவியை வழங்கியது.

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட ( சீனா உட்பட)  இந்தியா அதிகளவு உதவியை வழங்கியது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிநிகழ்வுகளிற்காக சென்றிருந்தவேளை அந்த நாட்டின் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி இலங்கைக்கு உதவி வழங்கிய நாடுகளின் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு உதவுமாறு கேட்டிருந்தார்.

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவது குறித்த இணக்கப்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து இந்தியா  கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வெளிப்படைதன்மை போன்றவற்றை வலியுறுத்தியிருந்தது.