எனது திருமணத்தின் ரகசியம்! மனைவிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு… நேர்மையுடன் பேசிய ரிஷி சுனக்

மனைவிக்கும் தனக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பேசிய ரிஷி சுனக்.

பிரித்தானிய பிரதமர் முன்னர் கொடுத்த பேட்டி தற்போது வைரல்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது திருமணத்தின் ரகசியம் குறித்து மனம் திறந்து சொன்ன விடயங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

அதன்படி ‘The Sunday Times’ பத்திரிக்கைக்கு ரிஷி சுனக் முன்னர் கொடுத்த பேட்டியில், நானும் என் மனைவி அக்‌ஷதாவும் வேறுபாடு மற்றும் வித்தியாசம் கொண்ட நபர்கள்.

அதாவது, நான் எல்லாவற்றையும் சுத்தமாக வைக்க விரும்புவேன், ஆனால் அவர் துப்புரவற்ற, அழுக்கான நிலையில் வைப்பார். நான் திட்டமிட்டு எதையும் செய்வேன், அக்‌ஷதா திடீரென திட்டமிடாமல் மேற்கொள்வார்.

இதைச் சொல்வதற்காக அவர் என்னை பாராட்ட போவதில்லை, ஆனால் நான் நேர்மையாக பேசுகிறேன். வீடுகளில் எல்லா இடங்களிலும் ஆடைகள்… மற்றும் காலணிகள் எல்லாம் கிடக்கும் என கூறியுள்ளார்.

ரிஷி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்க வந்தார் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி. அங்கு தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.