மூதாட்டியை சித்திரவதை செய்து நகை கொள்ளை : ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூதாட்டி தனிமையில் வசித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து அச்சுறுத்தி , கழுத்தில் இருந்த ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் விரலில் அணிந்திருந்த அரை பவுண் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை (27) தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.