மூடிய அறைக்குள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வழங்கிய வாக்குறுதி – தொடரும் சர்ச்சை

இந்திய வம்சாவளி பெண் சூவெல்லா பிரேவர்மன் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாராளவாத ஜனநாயக கட்சி (லிபரல் டெமாகிரட்ஸ்) வலியுறுத்திள்ளது.

சூவெல்லா பிரேவர்மன் நியமனம் குறித்து மந்திரிசபை அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு பதவி அளிப்பதாக மூடிய அறைக்குள் ரிஷி சுனக் வழங்கியுள்ள வாக்குறுதி உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட வேண்டும் எனவும் தாராளவாத ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் அலிஸ்டெயிர் கார்மிச்சேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, முக்கிய ஆவணம் ஒன்றை தனது சொந்த இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய சூவெல்லா பிரேவர்மனுக்கு ரிஷி சுனக் மீண்டும் உள்துறை அமைச்சர் பதவியை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூடிய அறைக்குள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வழங்கிய வாக்குறுதி - தொடரும் சர்ச்சை | Cabinet Of Rishi Sunak Promise Suvella Braverman

கடுமையாக விமர்சிக்கும் தொழிற்கட்சி

இதை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இதனை வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி நியாயப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “சூவெல்லா பிரேவர்மன் தனது தவறை ஒப்பு கொண்டு விட்டார். மன்னிப்பும் கேட்டு விட்டார்” மேலும், உள்துறை அமைச்சர் பதவியில் அவரது அனுபவத்தை பிரதமர் ரிஷி சுனக் மதிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூடிய அறைக்குள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வழங்கிய வாக்குறுதி - தொடரும் சர்ச்சை | Cabinet Of Rishi Sunak Promise Suvella Braverman

 

இருப்பினும், சூவெல்லா பிரேவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தாராளவாத ஜனநாயக கட்சி (லிபரல் டெமாகிரட்ஸ்) வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது அமைச்சரவையின் முதல் கூட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் நேற்று முன்தினம் நடத்தியுள்ளதுடன், அதில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.