22 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சஜித் வெளியிட்டுள்ள தகவல்

22 ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நல்லாட்சிஏற்படும் என்ற கருதுகோள் சர்வதேசத்துக்கு உள்ளது. இதனால் குறுகிய அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு ஐக்கிய மக்கள் கட்சி வாக்களித்தது.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,”முன்னாள் நிதி அமைச்சர், முன்னாள் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலகிய போதிலும், மொட்டுவின் கட்டளையின் கூடிய அரசே தற்போது இயங்கி வருகின்றது.

விவசாயிகளின் உரத்தையும், கடற்தொழிலாளர்களின் எரிபொருளையும் தடுத்து நிறுத்திய அதே எதோச்சதிகார அரசுதான் மறைமுகமாக நாட்டை ஆள்கின்றது.

கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளுக்கு திரிபோஷம் இல்லாத சந்தர்ப்பத்தில், எந்தச் சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியாக அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டோம். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்குவோம்” என கூறியுள்ளார்.