தாயுமான தலைவனே வாழி!

தமிழீழம் என்ற எமது தேசம் ஒளிபெறுவதற்கு உதய சூரியன் உதித்த இன்றைய நாள் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு புனிதமான நாள். பரந்து விரிந்த உலகத்தில் தமிழ் மக்களுக்கு என்று தனியான நாடொன்றை உருவாக்குவதற்காக போராடிய எமது தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த இன்றைய நாள் எமது தேசத்தின் பொன்னாள்.

சிங்கள அடக்குமுறையாளர்களிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கு பல்துறைசார்ந்த ஒரு வீரன் உதித்த இன்றைய நாள் உலகத் தமிழ் மக்களுக்கு ஒரு உன்னதமான நாள்.

தமிழ் மக்களின் தனித்துவ அடையாளங்களைக் கட்டிக்காக்க தரணி போற்றும் தனிப்பெரும் தலைவர் பிறந்த இன்றைய நாள் எமது மனங்களில் மறக்கப்பட முடியாத நாள்.