உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் : சீன ஜனாதிபதி

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனாதயார் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார் என வட கொரியாவின் கொரிய மத்திய செய்திச்சேவை இன்று தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதியின் 3ஆவது பதவிக்காலத்துக்கு ஸீ ஜின்பிங்தெரிவுசெய்யப்பட்டமைக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு அனுப்பிய பதிலில சீன ஜனாதிபதிஇதனைத் தெரிவித்துள்ளார்.

‘பிராந்தியத்தினதும் உலகினதும் அமைதி, ஸ்திரத்தன்மை, அபிவிருத்திமற்றும் சுபீட்சத்துக்காக வடகொரியாவுடன் இணைந்து செயற்பட சீனாதயாராகவுள்ளது’ சீன ஜனாதிபதி தெரிவித்தார் என கொரிய மத்தியசெய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட நீண்டதூரஏவுகணைகள் பலவற்றை வட கொரியா பரிசீலித்து சில நாட்களில்சீன ஜனாதிபதியின் இச்செய்தி வெளியாகியுள்ளது.

இறுதியாக 2017 ஆம் ஆண்டில் தனது 6 ஆவது அணுவாயுதபரிசோதனையை வடகொரியா நடத்தியது. அண்மைய நாட்களில்பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தநிலையில், தனது 7 ஆவது அணுவாயுத சோதனையையும் வடகொரியாநடத்தக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.