22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து, சவுதி அரேபியா அணிகள் மோதின. முதல் பாதியின் 39-வது நிமிடத்தில் போலந்தின் ஜிலின்ஸ்கி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார். இரண்டாவது பாதியில் 82வது நிமிடத்தில் ராபர்ட் லெவான்டௌவுஸ்கி ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முதல் போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை சவுதி அரேபியா அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.