மாவீரர் தினத்திற்கு பெருந்திரளாக அணி திரண்டுள்ள மக்கள்(Video)

மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அனைத்து துயிலும் இல்லங்களிலும் சிவப்பு-மஞ்சள் கொடிகளுடன் நினைவுதின அனுஷ்டிப்புக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பல துயிலும் இல்லங்களில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுவதற்காக அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டுள்ளதுடன் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்துகின்றனர்.