பிரதமர் உருத்திரகுமாரன் வெளியிட்ட மாவீரர் நாள் அறிக்கை

மாவீரர்களின் கனவான சுதந்திரமும்,இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசின் உருவாக்கம் என்பது அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால் அனைத்துலக அரங்கில் வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து இத்தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும் என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தமதுயிரை ஈகம் செய்த நமது வீரமறவர்களின் நினைவுகளை நாம் நமது இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கும் மாவீரர் நாள்.

மாவீரர் நாள் செய்தியில் வி.உருத்திரகுமாரன் வெளியிட்ட தகவல் | Maaveerar Day 2022

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்

தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் அடைந்தவர்களாய், தமது தாயகப்பூமியில் சிங்களத்தின் இனவழிப்புக் குறித்த அச்சம் அற்றவர்களாக, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றில் இன்புற வாழவேண்டும் என்ற கனவுடன் களமாடி வீரச்சாவடைந்த நமது தேசப்புதல்வர்களின் நினைவு நாள்.

நமது சிறிய தமிழீழத் தேசத்தினை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தி, நமது தேசத்தின் சுதந்திர வேட்கையை தமது வீரத்தாலும், ஈகத்தாலும் வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற உத்தமர்களின் திருநாள். மாவீர்கள் தமிழீழ மக்களின் மூச்செங்கிலும் நிறைந்துள்ளார்கள்.

தமிழீழ மண்ணெங்கும் விதைந்துள்ளார்கள். தமிழீழ கடலெங்கும், வான்பரப்பெங்கும் நீக்கமறப் பரந்துள்ளார்கள். தமிழீழ தேசத்தின் காவல் வீரர்களாய், நமது தேசத்தினை எதிரிகள் எவரும் அடிமை கொண்டு விடாதவாறு சுதந்திரக் கனலை மூட்டி விட்டவர்களாய் எம்முடன் அவர்கள் இறுகப் பிணைந்துள்ளார்கள்.

மாவீரர் நாள் செய்தியில் வி.உருத்திரகுமாரன் வெளியிட்ட தகவல் | Maaveerar Day 2022

தமது வீரர்களை வழிபடும் மரபினைக் கொண்ட தமிழ் மக்கள் இன்று நமது வீரர்களைத் தாம் தமது வாழ்வில் கண்ட தெய்வங்களாக உருவகித்து வழிபடுகின்றனர். சங்ககால மரபு கண்ட நடுகல் வழிபாட்டுக்கு சமகால எடுத்துக்காட்டாக நமது தமிழ் மக்கள் மேற்கொள்ளும் மாவீரர் வழிபாடு அமைகிறது.

மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய நாளில் நாம் மாவீரர்களின் கனவுகளை நம் மனதில் இருத்தி, அவர்தம் கனவுகளை நனவாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நம் மனதிலிருத்த வேண்டியது மிக அவசியமானதாகும்.

நமது தேசத்துக்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களை இன்றைய மாவீரர் நாளில் வணங்கி அவர்கள் நம் தேசத்துக்காக செய்த பணிக்கு, ஈகத்துக்கு வணக்கமும் நன்றியும் தெரிவிக்கும் நாளாக மட்டும் இன்றைய நாளை நாம் அணுகக்கூடாது.

மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு செய்யும் வணக்கத்துடன் நமது தேசத்துக்கான, நமது மாவீரர்களுக்கான கடமைகளை நாம் ஆற்றி விட்டோம் எனத் திருப்தி அடையவும் முடியாது. 2 ஆடி அமாவாசை நாளில் தந்தையினையும், சித்திரை பௌர்ணமியில் அம்மாவையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்பதுபோல், மாவீரர் நாளில் மாவீரர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டும் நாம் இந்நாளைக் கருதி விடக்கூடாது.

 

நாம் மாவீரர்களை வணங்குவது, போற்றுவது ஒரு சடங்கு வழிப்பட்ட நடைமுறையாக மட்டும் குறுகி விடக்கூடாது. மாறாக மாவீரர் கனவுகளை நனவாக்குவது குறித்த சிந்தனையையும் செயற்பாட்டையும் கூர்மையடைச் செய்யும் நாளாக மாவீரர் நாளை நாம் நமக்குள் வரித்துக் கொள்ள வேண்டும்.

மாவீரர் நாள் செய்தியில் வி.உருத்திரகுமாரன் வெளியிட்ட தகவல் | Maaveerar Day 2022

 

மாவீரர் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை நமது மாவீரர்கள் நமது தலைமுறையிடம் விட்டுச் சென்றுள்ளார்கள் என்ற பொறுப்புணர்வுடன் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என்ற உள்ளுணர்வை மாவீரர் நாள் நமக்குள் ஏற்படுத்த வேண்டும்.

இன்றைய நாளில் நாம் மாவீரர்களுக்கான சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தும் போது மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவோம் என நமக்குள் நாமே உறுதி பூண்டு கொள்வோம்.

 

இந்த உறுதியுடன், உலகில் தமிழ் மக்கள் வாழும் இடமெங்கும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மக்களுடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலைசாய்த்து நமது மாவீரர்களுக்கு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அவர்களது ஈகம் என்றும் வீண் போகாது. இவர்கள் ஏற்றி வைத்த விடுதலைத் தீ எமது தேசத்தை விடுவிக்கும். ஈழமணித் திருநாடு சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும். தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery