ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில் விடுதலை

ஈரானின் பிரபல நடிகை ஹென்காமேஹ் காஸியானி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயது யுவதி பொலிஸ் காவலில் உயிரிழந்ததால் ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக, ஹிஜாப் அணியாமல் பகிரங்கமாக தோன்றிய ஈரானிய நடிகைள் ஹென்காமே காஸியானி, கதாயோன் ரியாஹி ஆகியோர் கடந்த 20 ஆம் திகதி ஈரானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நடிகை ஹென்காமே காஸியானி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என ஈரானின் ஐஆர்என்ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.