திருகோணமலையில் யுவதியொருவர் தற்கொலை

திருகோணமலையில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நேற்று (27.11.2022) பதிவாகியுள்ளது.

காதலித்து வந்த இளைஞன் சரியில்லை என தாயார் தனது மகளுக்கு புத்திமதி கூறியதையடுத்து இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனந்த விநாயகர் வீதியில் வசித்து வரும் சிவக்குமார் கீர்த்தனா (18 வயது) என்பவரே இந்த தவறான முடிவை எடுத்துள்ளார்.

குறித்த யுவதியை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ள போதும் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.