தொடருந்து ,பேருந்து மோதி கோர விபத்து! சாரதி பலி – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் அரியாலை ஏ.பி வீதியில் தொடருந்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற தொடருந்து கடவை

 

இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையாக காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.

அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்