நாடு முன்னேற்றமடைய கல்விக்கொள்கை நிலையானதாக அமைக்கப்பட்ட வேண்டும் – .சிறிதரன்

 

வடக்கு மாகாணத்தில்  கிளிநொச்சி மற்றும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளி பாடசாலைகளை இராணுவம் நிர்வகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த முன்பள்ளி பாடசாலைகளை கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும். கல்வி அடிப்படை உரிமையாக காணப்பட்டாலும்,இலங்கையில் கல்வி அரசியல் கொள்கை அடிப்படையில் வகுக்கப்படுகிறது.

கல்வி கொள்ளை நிலையானதாக  அமைக்கப்பட்டால் மாத்திரமே இந்த நாடு முன்னேற்றமடையும்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிரிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மனிதன் பிறிதொரு மனிதனின் ஆளுமையை அழிக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 539 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்விக்கு 232 பில்லியனும், விவசாயத்திற்கு 115 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மனித வளத்தை அறிவூர்வமாக உருவாக்கும் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வெறும் கண்துடைப்பாக உள்ளது. கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி நாட்டின் கல்வி துறையை மேம்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது.

புதிய கல்வி கொள்கையை கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.முன்வைக்கப்படும் கொள்கைகள் நிலையானதாக அமையுமா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

ஒரு அரசாங்கம் முன்வைக்கும் கொள்கையை ஆட்சிக்கு வரும் அடுத்த அரசாங்கம் முன்னர் முன்வைத்த கொள்கையை இரத்து செய்து புதிய கொள்ளையை அமுல்படுத்தும் நாட்டின் கல்வி கொள்கையிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. ஆகவே முதலில் நிலையான கல்வி கொள்கையை கொண்டு வாருங்கள்,அதுவே இந்த நாட்டின் முன்னேற்றத்தை உறுப்படுத்தும்.பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகள் கல்வி கொள்கையை உறுதியாக உருவாக்கியுள்ளன.

ஆங்கில கொள்கைக்கு முன்னுரிமை வழங்குவது வரவேற்கத்தக்கது. தோல்வியடைந்த கொத்தணி கல்வி திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.நாட்டில் முள்பள்ளி கல்வி திட்டத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணத்தில் இராணுவம் முன்பள்ளிகளை நிருவகிக்கிறது. சிவில் பாதுகாப்பு பிரிவு ஊடாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.இந்த முன்பள்ளிகளை கல்வி அமைச்சு முன்னெடுத்தால் நாட்டின் கல்வித்துறையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளி பாடசாலைகளை இராணுவத்தினர் நிர்வகிப்பதை நிறுத்த வேண்டும்.உலகில் ஜனநாயக நாடுகளில் இவ்வாறான தன்மை காணப்படுகிறதா,ஆகவே இராணுவ மனநிலையில் இருந்து முதலில் விடுப்படுங்கள்.

53 ஆயிரம் பயிலுனர் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி அதிகாரி (தரம் மூன்று) நியமனங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியராக நியமனம் வழங்கப்பட்ட போது அவர்கள் அபிவிருத்தி அதிகாரி என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரிய துறை வான்மை விருத்தியுடன் தொடர்புடையது, இந்த நியமனத்தை ஏன் முறையாக வழங்க முடியாதுள்ளது. நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்ட போதும் அவர்களின் சம்பளம்,விடுமுறை ஆகியவை அபிவிருத்தி அதிகாரிகள் என்ற அடிப்படையில் காணப்படுகிறது. இது எவ்வாறு சாத்தியப்படும். இவ்வாறான செயற்பாடுகளினால் அந்த ஆசிரியர்கள் உளவியல்  ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள,  ஆகவே இப்பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வினை முன்வைக்க வேண்டும்.

13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதாக குறிப்பிடப்படுகிறது. மஹகரம தேசிய கல்வி நிறுவனத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் தற்போதைய பொருளாதார நிலையில் வந்து செல்வது கடினமானது.ஆகவே தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை ஒன்றறை மாங்குளம் பகுதியில் நிறுவ வேண்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கல்வி முகாமைத்துவ கற்கை முறைமை உருவாக்கப்படவில்லை. இந்த கல்வி முகாமைத்துவ முறைமை உருவாக்கப்பட்ட கல்வித்துறை முன்னேற்றமடையும்.கல்வி என்பது அடிப்படை உரிமை,ஆனால் இலங்கையில் கல்வி அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பாடசாலையில் கல்வி கற்ற சுதாகரன் வர்ஷணனின் தற்கொலை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆளுநருக்கும்,அரசாங்க அதிபருக்கும் அனுப்பி வைத்துள்ளது. 2022.11.11 ஆம் திகதி மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரினால். குறித்த பாடசாலையில் விஞ்ஞான பகுப்பாய்வு கலந்துரையாடல் தொடர்பான கூட்டத்திற்கு மாணவர்கள் பெற்றோருடன் கட்டாயப்படுத்தப்பட்டு சமூகமளிக்கப்பட்டுள்ள நிலையில், அமரர் சுதாகரன் வர்ஷணன் கலந்துக்கொள்ளவில்லை எனவும், பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கு அமையவாக மாணவனின் சுயவிருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பெற்றோர் அழைத்து வரப்பட்டமை தொடர்பாகவும்.சுய விருப்பத்திற்கு மாறாக கூட்டத்திற்கு அழைக்கப்பட்டமையால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இந்த மாணவன் விதையை உட்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இந்த சம்பவத்திற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

ஒரு மாணவன் கொல்லப்பட்டுள்ளார்.கட்டாயப்படுத்தல் ஊடாக இந்த மாணவனின் மரணம் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உதயன் ஆளுநருக்கும்,அரசாங்க அதிபருக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை அந்த மாணவனுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆகவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபையில் வலியுறுத்துகிறேன் என்றார்.