ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது

ஜேர்மனியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதி  செய்தனர் என்ற சந்தேகத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலதுசாரி குழுவொன்றையும், முன்னாள் இராணுவ அங்கத்தவர்களும், ஜேர்மனிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டனர் எனக் கூறப்படுகிறது.

13 ஆம் ஹெய்ன்றிக் இளவரசர்  (Prince  Heinrich XIII) எனக் கூறப்படும் 71 வயதான ஒரு நபர் இக்குழுவின் திட்டத்தில் முக்கிய நபராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் 11 மாநிலங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் இரு குழுத் தலைவர்களில் ஒருவராக மேற்படி நபர் இருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.