இலங்கையில் தொடரும் விபத்துக்கள்! ஐவர் பரிதாபமாக மரணம்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கிதலவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தொடரும் விபத்துக்கள்! ஐவர் பரிதாபமாக மரணம் | Srilanka Today Accident

எல்ல – வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பெரியமுகத்துவாரம் பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தொடரும் விபத்துக்கள்! ஐவர் பரிதாபமாக மரணம் | Srilanka Today Accident

 

இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியின் பட்டுகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய – தனமல்வில வீதியில் தெளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வானின் சாரதியே உயிரிழந்துள்ளார்.