மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி நாமல் பலல்லே தெரிவு

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் புதிய தலைவராக  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பாலல்லே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புதிய செயலாளராக நீதிபதி  சுஜீவ நிஷங்க தெரிவிவு செய்யப்பட்டுள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.11) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போதே  சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குழு தெரிவு செய்யப்பட்டது.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நாமல் பலல்லேயும்,  உப தலைவராக  நீதிபதி மஞ்சுள திலகரத்னவும், செயலாளராக நீதிபதி சுஜீவ நிஷங்கவும், உப செயலாளராக   நீதிபதி மொஹம்மட் சஹாப்தீனும்  பொருளாளராக  ஜயகி டி அல்விஸும், ஏற்பாட்டாளராக நயோமி விக்ரமசேகரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக, நீதிபதிகளான  தமித் தொட்டவத்த,  எம். இளஞ்செழியன்,  லால் பண்டார, பமில ரத்நாயக்க,  லக்மால் விக்ரமசூரிய, நிரோஷா பெர்ணான்டோ, ரவீந்ர நாண்யக்கார,  நயனா செனவிரத்ன,  ஷிவந்த மஞ்சநாயக்க,  சமத் மதநாயக்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.