பிரித்தானியாவில் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த ரிஷி சுனக் அதிரடி திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் சுமார் 44,000 புலம்பெயர்ந்தோர் படகுகள் மூலம் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள நிலையில் இவ்வாறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்த உடனே அவர்களை நாடு கடத்தும் திட்டமொன்றினை தயாரித்துள்ளார்.
மேலும், படகுகளில் பிரித்தானியாவிற்குள் நுழைவதினை சட்டவிரோதமாக கருதப்படும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக பணி செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டுபிடிக்கும் சோதனை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலக்கால்வாயை கடக்கும் சட்டவிரோத புலம்பெயர்வோரை கட்டுப்படுத்தும் பொறுப்பு தேசிய குற்றவியல் ஏஜன்சியிடம் கையளிக்கப்படும்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதால் புகலிடக்கோரிக்கைகள் நீக்கப்படும்.