கொவிட் பரவுவதை கண்காணிக்க முடியாத நிலையில் சீனா – கார்டியன்

சீனா தனது நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனாவை கண்காணிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவின் சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகளை பதிவு செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீனா கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடைமுறைகளை தளர்த்தியதை தொடர்ந்து கொரோனா தீடீர் என அதிகரித்துள்ளதை தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே சீன அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

மிகவும் அவசியமான நிலையில் மாத்திரம் பொதுமக்களை சுகாதாரசேவையை நாடுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் முதியவர்கள் பலவீனமான நிலையில் உள்ளவர்களிற்கு இரண்டாவது பூஸ்டரை வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

சீன அரசாங்கம் கடந்த வாரமே தனது பூஜ்ஜிய கொவிட்கொள்கையை முடிவிற்கு கொண்டுவந்திருந்தது, போக்குவரத்து கட்டுப்பாடுகள் முடக்கல் நிலையை முடிவிற்கு கொண்டுவந்துள்ள சீனா பாரிய மருத்துவ சோதனைகள் கட்டாய சோதனைகள் போன்றவற்றையும் முடிவிற்கு கொண்டுவந்துள்ளது

இதன் காரணமாக நாளாந்த புள்ளிவிபரங்கள் துல்லியமற்றவையாக மாறியுள்ளன.

எதிர்காலத்தில் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளர்கள் குறித்து அறிவிக்கப்போவதில்லை என தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளர்கள் சோதனை நடவடிக்கைகளில் பங்கெடுப்பதி;ல்லை இதனால் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களை  அடையாளம் காண்பது கடினம் என தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.