370 ஆவது பிரிவு இரத்துச் செய்யப்பட்ட பின்னர் ஜம்மு – காஷ்மீர் அமைதியை நோக்கி நகர்கிறது

2019 ஆகஸ்டில் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 100 க்கும் கீழ் குறைந்துள்ளது. ‘முந்தைய சமஸ்தானத்தில் ஜம்மு – காஷ்மீரின் அமைதி மற்றும் இயல்பு நிலை’ என்று அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5, 2019 அன்று அரசாங்கத்தின் நடவடிக்கையானது இமயமலைப் பகுதியில் 30 ஆண்டுகால கொந்தளிப்புக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் அமைதியை நோக்கிச் செல்ல உதவியுள்ளது. பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இதற்கு போதுமான சான்றாகியுள்ளது. முரண்பாட்டின் விதைகளை விதைத்து, பிரிவினைவாதம் மற்றும் தேசத்துரோகம் ஜம்மு காஷ்மீர் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு காரணமாக இருந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு -காஷ்மீரின் தற்காலிக சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், காஷ்மீர் ஒரு ‘தீர்க்கப்படாத பிரச்சினை’ என்ற கருத்தை உருவாக்கியது.

2021ஆம் ஆண்டிலும், ஆசிரியர்கள், உள்ளூர் அல்லாத தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் பிறரை குறிவைத்து காஷ்மீரில் இருந்து சிறுபான்மை சமூகங்களைத் துரத்த பயங்கரவாதிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ஒழித்ததால், அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.