தினேஷ் ஷாப்டர் படுகொலை தொடர்பில் சந்தேகநபர்கள் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேகநபரும் இதுவர கைது செய்யப்படவில்லை அல்லது சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 58 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

மேலும், தொலைபேசி தகவல்கள் தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடுன், தினேஷ் ஷாப்டரின் நெருங்கிய வட்டாரங்களில் உள்ளவர்கள் உள்ளிட்ட உறவினர்கள் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது