சுனாமியில் இறந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் 26 ஆம் திகதி காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை ‘தேசிய பாதுகாப்பு தினம்’ நாளை (26) கொண்டாடப்படவிருக்கிறது. காலி பறலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் முப்படையினர் பொலிஸார் மற்றும் கலந்துகொள்ளவுள்ளனர்.