அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கையின் அரச ஊழியர்கள் புதிய ஆண்டுக்கான முதல் நாளில், நாடு பொருளாதார மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதால் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு முன்னுரிமைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே வெளியிட்டுள்ளார்.

கிராமப்புற அலுவலகங்கள் முதல் தேசிய உணவுப் பாதுகாப்புக்குழு வரையிலான பொது ஊழியர்கள் தங்கள் வழக்கமான கடமைகளைத் தாண்டி இந்த தேசியப் பொறுப்பைச் செய்ய தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று மாயாதுன்னே கூறியுள்ளார்.

அத்துடன் அரச செலவினங்களைக் குறைப்பதற்கும், அரச வருவாயை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அரச ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு! | Special Announcement Government Employees

பொருளாதார நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்ள மற்ற நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களிலிருந்து அரச ஊழியர்கள் பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்றும் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய மத்திய அரசு, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, ‘செழிப்பு மற்றும் சிறப்பின் காட்சிகள்’ என்ற தலைப்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியை அரச துறை ஊழியர்கள் எடுக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.