ராஜபக்சாக்களை பாது காத்த ரணில்!சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசில் எந்த அமைச்சுப் பதவியையும் நான் பொறுப்பேற்கமாட்டேன் என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை. ரணில் பழுத்த அரசியல்வாதி. சிறந்த தலைவர்.

எனினும், அவர் தலைமையிலான தற்போதைய அரசில் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க நான் தயார் இல்லை.

எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் எவரும் முரண்படவும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.