அமெரிக்கப் பாராளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவானார்

US Republican Representative Kevin McCarthy (R) of California chats during a break as the US House of Representatives convenes for the 118th Congress at the US Capitol in Washington, DC, January 3, 2023. - The new US Congress was thrown into chaos on its first day Tuesday as rebel right-wing Republicans moved to block party favorite Kevin McCarthy from becoming speaker of the House of Representatives. (Photo by Mandel NGAN / AFP)

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவாகியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி 222 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 212 ஆசனங்களையும் கொண்டுள்ளது.

குடியரசுக் கட்சி எம்.பியான கெவின் மெக்கார்த்தி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டார். எனினும், அக்கட்சியின் 20 எம்பிகள் மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்து வந்ததால் 3 நாட்களில் 11 சுற்று வாக்களிப்புகள் நடைபெற்ற போதிலும், சபாநாயகர் தெரிவு இழுபறி நீடித்தது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 15 ஆவது சுற்று வாக்களிப்பில் மெக்கார்த்தி வெற்றியீட்டினார்.

அளிக்கப்பட்ட 428 வாக்குகளில் 216 வாக்குகளைப் பெற்று கெவின் மெக்கார்த்தி வென்றார்.

ஜனநாயகக்கட்சியின் 212 எம்.பிகளும் தமது கட்சியின் பிரதிநிதியான ஹக்கீம் ஜெப்ரீஸுக்கு வாக்களித்தனர்.