கூட்டமைப்பின் தைப்பொங்கல் கோரிக்கைகளுக்கு விரைவில் பதில்- விஜயதாச ராஜபக்ச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்துள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பதில்களை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று அமைச்சர் இந்த பதில்களை வழங்கவுள்ளதாக கடந்த வாரம் இடம்பெற்று ஒத்திவைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

பதிலளிக்கவுள்ள விஜயதாச ராஜபக்ச
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போதே தமிழ் கட்சிகளுக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பதில் அளிப்பார் என ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உயர்மட்ட இராணுவத் தலைவர்களை சந்திக்கும்போது காணி விவகாரங்கள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.