சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்லவிருப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை- ரிஷி அறிவிப்பு

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் மற்றும் நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இனி நட்சத்திர ஹோட்டல் எல்லாம் கிடையாது சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் இனி நான்கு நட்சத்திர ஹோட்டல்களிலெல்லாம் தங்கவைக்கப்படமாட்டார்கள்.

அவர்கள் கைது செய்யப்படுவதுடன், நாடுகடத்தப்படுவார்கள் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் வாரங்களில் புலம்பெயர்ந்தோரின் படகுகளை நிறுத்தும் மசோதா சட்டமாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த மசோதாவில், நீங்கள் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் வந்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவீர்கள் என்பது திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது

சட்டவிரோத புலம்பெயர்தல் பிரச்சினையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் எனவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மேலும் சுட்டக்காட்டினார்.