தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சலுகை!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத நிலையில், நீர் விநியோகத்தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்கள் உள்ளடங்களாக சில நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளில் வசிப்பவர்களினால் நீர் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, ஊடகங்க கருத்து தெரிவித்த நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.