இலங்கையில் தேடப்பட்ட தமிழர் தமிழகத்தில் கைது

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டுவரும் நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த எஸ். சிந்துஜன் என்ற 22 வயதுடையவரே கைது செய்யப்பட்டவராவார். இவர் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக சந்தேகநபர் கடந்த 17ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.