யாழில் ரணிலுக்கு எதிராக போராடியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட 18 பேர் தொடர்பான தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பு
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு அன்றிரவே 18 பேரையும் பிணையில் விடுத்து யாழ்ப்பாண மேலநிக நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.