பிரித்தானியாவிலிருந்து பறந்த விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சியில் விமானி

பிரித்தானியாவிலிருந்து பறந்த விமானத்தில் நடுவானில் பயிற்சி விமானி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் உயரத்தில் பறந்த போது அவருக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

சிறிய ரக விமானமொன்றை மூத்த விமான பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி விமானிக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக நடுவானில் பயிற்சியளிக்கும் போது திடீரென பயிற்சியாளரின் தலை சரிந்துள்ளது.அவர் தூங்குவது போன்று நடிக்கிறார் என விமானி நினைத்துள்ளார்

பிரேத பரிசோதனை முடிவு
விமானம் தரையிறங்கிய பின்னரும் பயிற்சியாளர் பதில் எதுவும் அளிக்காமல், எழுந்திருக்காத நிலையில், அதிர்ச்சியடைந்த விமானி அவசரகால விமான பணியாளரை அழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

விமானம் உயரத்தில் பறந்த போது அவருக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.