அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிந்தமை குறித்து அவுஸ்திரேலியா கவலை

அமெரிக்காவின் போர் புலனாய்வு இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா இது தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்க பேச்சாளர் அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக துரிதமாக அறிவித்துள்ளமை குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் யுத்தம்,சீனா மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா உட்பட பல பகுதிகள் குறித்த ஆவணங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன