கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை கையளிக்க கால அவகாசம்

கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாளை புதன்கிழமை (12) நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள சகல சேவை பெறுனர்களையும் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை கையளிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதி அரச விடுமுறை என்பதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை 12 மணிக்கு பின்னர் நேரம் ஒதுக்கிக் கொண்டவர்கள் உட்பட அனைவரும் அதற்கு முன்னரே வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்துச் செல்லுமாறு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இழுக்பிட்டிய தெரிவித்துள்ளார்