இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் – அமெரிக்கா வேண்டுகோள்

இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் ஜெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகில் அதிக கடன்வழங்கிய நாடான சீனா இலங்கைக்கு விசேட நம்பகதன்மை மிக்க நிதி உத்தரவாதங்களை வழங்கியமை தனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் சீனாவும் அனைத்து கடன்வழங்கியநாடுகளும் தங்கள் அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனா தனது தொடர்பாடல்களை தொடர்ந்தும் பேணும் என அமெரிக்க திறைசேரிசெயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஸ்யாவின் நடவடிக்கைகளிற்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்வதற்காக போராடும் உக்ரைனிற்கு சர்வதேச சகாக்கள் தொடர்ந்தும் ஆதரவளிக்கவேண்டும் என யனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார்.

தடைகள் ஏனையநடவடிக்கைகள் மூலம் ரஸ்யா மீது தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவருடகாலமாக எங்களது நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் ரஸ்யாவின் இராணுவதொழில்துறையை அழித்துள்ளது போருக்கு பயன்படுத்துவதற்கான ரஸ்யாவின் நிதிவளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.