இலங்கை மத்திய வங்கியிலிருந்து பெருந்தொகை பணம் திருட்டு-திருட்டலோடு சம்பந்தப்பட்ட பொலிஸார் விசாரணை

இலங்கை மத்திய வங்கியில் இருந்து நேற்று(11.04.2023) காணாமல்போனதாக கூறப்படும் 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய கொழும்பு – கோட்டை பொலிஸார் இன்று(12.04.2023) காலை மத்திய வங்கிக்கு சென்று,சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கியின் பாதுகாப்பான பண வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த,50 இலட்சம் ரூபா பணக் கட்டே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

முதலாம் இணைப்பு
இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு நேற்று(11.04.2023) பிற்பகல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை
இலங்கை மத்திய வங்கியிலிருந்து மாயமான பெருந்தொகை பணம்!பொலிஸார் தீவிர விசாரணை | Cash Missing From Central Bank Of Sri Lanka

இருப்பினும் அவர்கள் மேலும் ஒருமுறை பணம் காணாமல் போனது தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும், கோட்டை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.