இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் கூட்டத்தினை ஏற்பாடு செய்வதற்கு ஜப்பானின் நிதியமைச்சர் முயற்சி

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக கடன்வழங்கிய நாடுகளின் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது.

ஜப்பான் இந்தியா பிரான்ஸ் உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகள் தங்கள் திட்டத்தினை வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளன.

இலங்கைக்கு அதிககடன்வழங்கிய நாடு என்ற அடிப்படையில் சீனாவுக்கும் அழைப்பு விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கடன்நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான முன்னுதாரணமாக அமையலாம்.

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக வட்டிவீதத்தினால் நடுத்தர வருமான நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.