இலங்கையிலிருந்து கிறிஸ்தவ மதபோதகர் ஜெரோம் தப்பியோட்டம்

மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இன்றைய தினம் (16.05.2023) காலை அவர் நாட்டில் இருந்து வெளியேறிச் சென்றதாக அவரின் நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்றும் விரைவில் வேறொரு இடத்திற்குச் செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்குச் செல்வதற்கான விசா
இரண்டு நாடுகளுக்குச் செல்வதற்கான விசாக்கள் இருப்பதாகவும் கூறப்படுள்ளது.

எவ்வாறாயினும், போதகர் ஜெரோம் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை குடிவரவுத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.