அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் மெக்கார்த்தி

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று (3) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சனப்பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

234 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆனால், பெரும்பாலான ஜனநாயக கட்சியினர் எட்டு குடியரசுக் கட்சியினருடன் இணைந்ததால், மெக்கார்த்தியின் பதவியை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

58 வயதான முன்னாள் தொழிலதிபர் மெக்கார்த்தி, அவையை விட்டு வெளியேறியதும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.