பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) மதியம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் 01.10.2023 தீர்மானத்திற்கமைவாக வியாழக்கிழமை (12) அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வினை வேண்டியுமே அடையாள ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
src=”https://nationaltamil.com/wp-content/uploads/2023/10/DED8B1DD-4A90-47F0-90E0-889AD11DC164-300×223.jpeg” alt=”” width=”300″ height=”223″ class=”alignnone size-medium wp-image-9707″ />
மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் “மொழித் தேர்ச்சி கொடுப்பனவை மீள் வழங்கு, பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமல் ஆக்கப்பட்ட சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, ஊழியர்களின் சேமலாப, நம்பிக்கை ஓய்வூதிய நிதிகளை கொள்ளையடிக்காதே, அரசே அரச பல்கலைக்கழக முறைமையை காப்பாற்று, வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்றாற்போல் சம்பள அதிகரிப்பை வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.