பள்ளிமுனை கிராம மீனவர்கள் போராட்டம்

மன்னார் – பள்ளிமுனை கிராம மீனவர்கள் மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு முறைமை மற்றும் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும் அனுமதி சீட்டு முறைமையை இரத்து செய்து, பொதுவான அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.