அரசாங்கத்துக்கு 28 இலட்சம் ரூபா நாட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து சரண குணவர்தன விடுவிப்பு

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் போது 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து அச் சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார்

பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரண குணவர்தன செயற்பட்ட காலப்பகுதியில் வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் போது, 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.